'தந்தையின் பல வருஷ விருப்பம்'.. திருமண நாளன்று நிறைவேற்றிய மணமகள்.. நெகிழவைக்கும் நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 11, 2019 03:25 PM
திருமணத்தன்று, மணமகள் ஒருவர் தனது திருமணத்துக்கு வந்தவர்களை ஆட்டோவில் வைத்து ஊர்வலமாக சென்றுள்ள நிகழ்வு வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் குறிச்சித்தனத்திற்குட்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோயிலில் மகிமா என்கிற பெண்ணுக்கும் சுராஜ் என்கிறவருக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கு பிறகு, அதே திருமண அலங்காரத்துடன் ஒரு மணப்பெண் ஆட்டோ ஓட்டிய சம்பவம் அம்மாநிலத்தில் ட்ரெண்டாகியது.
கேரளாவின் உழவூர் பகுதியைச் சேர்ந்த மோகனன் நாயர் என்பவர் கடந்த 1995-ஆம் வருடத்தில் இருந்து, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தொடக்க காலத்தில் இருந்து, மகளின் திருமணத்துக்கு வரும் அனைவரையும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் ஆசையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மோகனன் நாயரின் மகள் மகிமா திருமண அலங்காரத்தில் ஆட்டோ ஓட்ட, அதன் பின்னே சுமார் 20 ஆட்டோக்கள் ஊர்வலமாக வலம் வந்திருக்கின்றன. சிறு வயதில் இருந்தே தந்தையைப் பார்த்து ஆட்டோ ஓட்டும் ஆசையில் இருந்த மகள், மகிமா முறையாக பயின்று, ஆட்டோவுக்கான லைசன்ஸூம் எடுத்தவர்.
திருமணத்துக்காக செலவு செய்து கார்களில் ஊர்வலம் செல்லும் இந்த காலக்கட்டத்தில், தனது திருமணத்தில் தானே ஆட்டோ ஓட்டிய இந்த மணமகள் பலராலும் பாராட்டப் பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.