'ஓ'ண்ணு ஒரே 'அழுகை'யில்...'வேற லெவலில் ட்ரெண்டான சிறுவன்'...அழுகைக்கு கிடைத்த 'சர்ப்ரைஸ்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 19, 2019 02:52 PM

பிரச்சாரதின் போது தன்னை பார்க்க முடியாமல் அழுத சிறுவனுக்கு,சர்ப்ரைஸ் கொடுத்து,இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ராகுல் காந்தி.

Kannur boy cries in not meeting Rahul Gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.இதன் காரணமாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர்,கடந்த 17-ம் தேதி  கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அப்பகுதியில் வசிக்கும் நந்தன் என்னும் ஏழு வயது சிறுவன் ராகுல் காந்தியைப் பார்க்க விரும்பியுள்ளான்.

ராகுல் காந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே அவரை நிச்சயாமாக பார்க்க வேண்டும் என்ற அவலில் வெகு நேரமாக தனது பெற்றோருடன் காத்திருந்தான். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறுவனால் ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை.’ராகுல் எனக்கு மிகவும் பிடித்தவர்’ என்ற பதாகையுடன் காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதனிடையே ராகுலைப் பார்க்கமுடியாமல் அழுது கொண்டிருந்த சிறுவனின் புகைப்படத்தை அச்சிறுவனின் தந்தை ஃபேஸ்புக்கில் பதிவிட, அந்தப் பதிவு கேரளாவில் வைரலானது.

இந்த தகவல் கேரள காங்கிரஸ் தலைமைக்கு செல்ல,அவர்கள் அதனை ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.இதனை அறிந்து நெகிழ்ந்து போன ராகுல் காந்தி,உடனடியாக சிறுவன் நந்தனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராகுல்.இதனை சற்றும் எதிர்பாராத சிறுவனின் குடும்பம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனது.உடனே ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளான் அந்த சிறுவன்.