‘நன்னடத்தை விதியை மீறினாரா ராகுல்?’.. தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Mar 19, 2019 06:09 PM

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரத்துக்கு வந்துள்ள ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு சேஞ்ச் மேக்கர்ஸ் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடிய ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

rahul gandhi speech in stella maris college controversy, new update

முன்னதாக மாணவிகளிடம் தன்னை சார் என்று அழைக்காமல், ராகுல் என்றே அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த ராகுலின் அணுகுமுறைக்கு மாணவிகள் அரங்கை அதிரவைத்தனர். அதன் பின்னர் ராகுலை ராகுல் என்றழைத்த பெண்ணும் அரங்கை அதிரவைத்திருந்தார்.அதன் பின்னர் ராகுலை ராகுல் என்றழைத்த பெண்ணும் அரங்கை அதிரவைத்திருந்தார். அதன் பின்னர் ஊழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய ராகுல் காந்தி, மோடியையும் மத்திய அரசினையும் விமர்சித்ததோடு, தாங்கள் வந்தால் எந்தெந்த மாற்றங்களை எல்லாம் நிகழ்த்துவோம் என்றும் கூறினார்.

இது ஒரு வகையிலான பிரச்சார தொனியில் இருந்ததால், இக்கல்லூரியின் கல்வி இயக்குனர், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்க, ராகுல் கலந்துகொண்ட பேசிய இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது? எவ்வாறு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் இதுபற்றி ஆய்வு செய்து நிர்வாகத்திடம் அறிக்கை வழங்குமாறு கல்லூரியின் கல்வி இணை இயக்குனருக்கு இக்கல்லூரியி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கல்லூரியின் கல்வி இணை இயக்குனர் அளித்த ஆய்வறிக்கையின் பேரில், கல்லூரி இயக்குனர் தேர்தல் அதிகாரிக்கு பதில் விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, இன்று  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி தேர்தல் நன்னடத்தை விதியை மீறி நடக்கவில்லை என அறிவித்துள்ளார். 

Tags : #CONGRESS #RAHULGANDHI #CONTROVERSY