’பிரான்ஸ்’ நாட்டில் உள்ளது போல்... நம்ம ஊரிலும் ’காதல் மரம்’! - தங்கள் காதல் நிலைத்து நிற்க... ஜோடி ஜோடியாக வந்து பூட்டு போட்டுவிட்டு செல்லும் காதலர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா"பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல்" என்ற பெருமை புதுச்சேரிக்கு உண்டு. பிரெஞ்சு உணவு, பிரெஞ்சு காலத்து கட்டிடங்கள், பிரெஞ்ச் பெயர்களை தாங்கிய சாலைகள் என சுற்றுலா பயணிகளை புதுச்சேரி ஈர்த்து வருகிறது. அந்த வரிசையில் புதிதாக இடம் பெற்றிருப்பது "லவ் லாக்" மரம். இதனை தனியார் உணவக உரிமையாளர் சத்தீஷ் என்பவர் அமைத்துள்ளார்.
சுய்ப்ரேன் வீதியில் அலங்கார விளக்கை அமைத்து அதில் காதல் பூட்டுக்களை மாட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் காதலர்கள் பூட்டுபோட்டு சாவியை ஆற்றில் வீசியும், அதனை பத்திரப்படுத்தியும் வந்தனர். பின்னர் காதலர்களின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாறியதால் அங்கேயே சில ஜோடிகள் தங்கள் திருமணத்தை நடத்தினர்.
இந்த நிலையில், பாலம் முழுவதும் பூட்டுகளால் நிரம்பியதை அடுத்து அதனை தடுக்கும் வகையில் தற்போது பூட்டுப் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அங்குள்ள லவ் லாக் ட்ரீ எனப்படும் கம்பங்களில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் வகையில் இன்றும் பூட்டு போட்டுக்கொண்டுதான் வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தேசம் கடந்த நேசங்கள் பூத்து குலுங்கும் லவ் லாக் ட்ரீ முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
தங்கள் காதலின் அடையாளத்திற்கு பூட்டுப்போடும் கலாச்சாரம் நமது மண்ணின் காதலர்களிடமும் புகுந்து தற்போது புகழ்பெற்று வருகின்றது. தற்போது எண்ணற்ற காதலர்களும் இங்கே வந்து குவிகின்றனர். இதனால் சுய்ப்ரேன் வீதியில் உள்ள இந்த லவ் லாக் ட்ரீ தற்போது காதலர்களின் முக்கிய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.