“முடியல!”.. “பொறுமையை சோதித்த சேட்டைக்கார பூனை!”... “பொறுத்துப் பார்த்த புத்தத் துறவியின் முடிவு!”... வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jan 06, 2020 03:00 PM

தாய்லாந்தில் புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதிக்கு வித்திடும் வகையில் 4 முதல் 5 மணி நேரம் வரையிலான பௌத்த வழிபாட்டில் இருந்த புத்தத் துறவி ஒருவரின் பொறுமையை சோதிக்கும் வகையில் பூனை ஒன்று செய்த சேட்டை வீடியோவாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Friendly feline tests Buddhist monk\'s patience video goes viral

அதன்படி, பௌத்த மத புத்தகத்தை படித்தபடி ஆழ்ந்த வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த 25 வருட அனுபவமிக்க புத்தத் துறவியின் மீது, அங்கு சுற்றித் திரிந்துகொண்டிருந்த கொழுத்த பூனை ஒன்று ஏறி,  சேட்டை செய்துகொண்டிருந்தது.

உயிர்களின் மீதான கருணையையும், அன்பையும் வலியுறுத்தும் ஒரு புத்தத் துறவி என்ன செய்வார்? என்று எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அந்த துறவியோ பூனையின் சேட்டைக்கு செவி கொடுத்து அதன் இயல்போடு தன்னியல்பை கரைத்துக் கொண்டார். பின்னர் அந்த சேட்டக்கார பூனை அதுவாகவே இறங்கிச் சென்றது.

இதுபற்றி பேசிய அந்த புத்தத் துறவி, தன் புத்தகத்தை மறைத்து, சுமார் 15 நிமிடம் பூனை தன்னை சோதித்தாகவும், ஒரு கட்டத்துக்கு மேல், புத்தகத்தை படிப்பதை விட்டுவிட்டு பூனையின் இயல்பில் லயிக்கத் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #CAT