‘எல்லாம் 2 நிமிஷ கதாபாத்திரங்கள்.. அதுவும் ஹீரோக்கள் கூட அட்ஜஸ்ட் பண்ணதுனால!’.. ‘உங்க குழந்தைங்களுக்கு இப்படி நடந்தா இதேதான் சொல்வீங்களா?’.. ஜெயா பச்சனுக்கு கங்கணாவின் ‘அனல் தெறிக்கும்’ பதில்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 16, 2020 06:55 PM

பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யும், மூத்த நடிகையுமான ஜெயா பச்சனுக்கு அளித்த கடுமையான வைரலாகி வருகிறது.

2 mins roles after sleeping with hero Kangana slams Jaya thali remark

முன்னதாக இன்று காலை மாநிலங்களவையில் பேசிய ஜெயா பச்சன் , தன் மறைமுக விமர்சனத்தை முன்வைத்தார்.  அதன்படி ஹந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், மக்களவை எம்.பி. ஒருவர் திரைத்துறைக்கு எதிராக பேசியதற்கு, தான் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் பிரபல போஜ்புரி நடிகருமான ரவி கிஷன் திரைப்படத் துறையில் போதைப் பழக்கத்தின் சிக்கல் இருப்பதாகக் கூறியதன் அடுத்த நாள் ஜெயா பச்சன் இப்படி சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “ஜெயா ஜி என் இடத்தில் உங்கள் மகள் ஸ்வேதா, போதைப்பொருள் மற்றும் பதின்ம வயதினராக இருந்து துன்புறுத்தப்பட்டிருந்தாலோ, அல்லது அபிஷேக் தொடர்ந்து கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து, பின்பு ஒருநாள் தூக்கில் தொங்கியதைக் கண்டாலோ அப்போதும் இதையேதான் சொல்வீர்களா? எங்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கள்”, என ஜெயா பச்சனை நோக்கி கங்கணா ட்விட்டரில் கேட்டுள்ளார்.

மேலும் கங்கணா ரனாவத் பாலிவுட்டை சாக்கடை என்று அழைத்திருந்தது பற்றியும் சாடி பேசிய ஜெயா பச்சன், “பாலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர்களே இதை ஒரு சாக்கடை என்கின்றனர். அவர்களுடன் நான் உடன்படவில்லை. தொழிலில் தங்களுக்குண்டான வருமானத்தையும் பெயரையும் புகழையும் சம்பாதித்துக்கொண்ட பின்னர் இந்த நபர்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை பாலிவுட்டின் கரங்களை வெட்டுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தும் என்று நம்புகிறேன்.” என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும் மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் கூறியிருந்தார்.

இதற்கு தேசிய விருது பெற்ற கங்கணா, “சம்பாத்தியம்.? அதுவும், நடிகர்களுடன் ஒத்துழைத்ததால், 2 நிமிட ரொமான்ஸ் மற்றும் சபல கதாபாத்திரங்களால் கிடைத்தது.  திரைத்துறையில் பெண்ணியத்தை நான் பயிற்றுவித்தேன். எனது வாழ்வை நான் எனது அர்ப்பணிப்பினாலும் பெண்ணிய திரைப்படங்களாலும் அலங்கரித்தேன். இது நான் சம்பாதித்தது. நீங்கள் கொடுத்ததல்ல” என்று பதில் அளித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 2 mins roles after sleeping with hero Kangana slams Jaya thali remark | India News.