‘பசிய போக்க வேற வழி தெரியல’.. ‘அழுகிய’ வாழைப்பழத்தை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. கலங்க வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 16, 2020 10:58 AM

ஊரடங்கால் உணவில்லாமல் தவிக்கும் தொழிலாளர்கள் சாலையோரம் கொட்டப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை எடுத்து சாப்பிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hungry migrant workers eat rotten bananas at Delhi cremation ground

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அன்றாட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த தொழிலாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி யமுனை நதி அருகே உள்ள நிகோம்போத் என்ற இடத்தில் அழுகிய வாழைப்பழங்கள் கொட்டப்பட்டுள்ளன. ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் பசியில் அழுகிய வாழைப்பழங்களில் இருந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.