என்னாது வெங்காயம் 'இவ்ளோ' கம்மி விலைக்கு தர்றாங்களா? முண்டியடித்து அலைமோதிய கூட்டம்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 05, 2019 06:14 PM

வடமாநிலத்தில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதை அடுத்து, தென் மாநிலங்களுக்கு வரும் வெங்காயத்திற்கு கிராக்கி அதிகமானது.

People gather in masses to buy cheaper onions in Andhra

அதாவது வடமாநிலத்தின் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தவுடனே, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், வெங்காய விலை, தங்க விலை போல் உயர்ந்தது. தங்கத்தை பணம் இருக்கும்போதே வாங்கி பத்திரத்தப் படுத்தி வைப்பது போல், வெங்காயத்தை பெறுவதற்கான முனைப்பினை மக்கள் காட்டுகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை, வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படும் நிலையில், ஆந்திராவில் வெங்காய விலை கிலோ 95 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆந்திர அரசின் தரப்பில் கிலோ 25 ரூபாய்க்கு தரப்படும் வெங்காயத்தினைப் பெற மக்கள் அலைமோதிக்கொள்ளும் சம்பவங்கள் வீடியோக்களாக இணையத்தில் வலம் வருகின்றன. இந்த வீடியோவில் ஒரு பெரியவரை இடித்துத் தள்ளிவிட்டு மக்கள் மலிவு விலை வெங்காயத்தை வாங்க ஓடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கு தரப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடாத குடும்பத்தில் இருந்து தான் வந்தவராகக் குறிப்பிட்டிருந்ததார். அதனை ஒப்பிட்டு, இந்த புகைப்படங்களை பகிரும் பலரும்,  ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், வெகு மக்கள் வெங்காயத்துக்காக படும் பாட்டை பாருங்கள்’ என்று பதில் அளித்து வருகின்றனர்.

 

Tags : #ANDHRAPRADESH #ONION #PRICE #HIKE