'சுஜித்தைத் தொடர்ந்து'.. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. 8 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 05, 2019 05:46 PM
மிக அண்மையில் தமிழ்நாட்டில் திருச்சி அருகே உள்ள மணப்பாறையை சேர்ந்த பாலகன் சுஜித், தனது வீட்டின் அருகிலேயே தனது தந்தையால் தோண்டப்பட்ட ஆழ்துளை குழாயில் விழுந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே கலங்கச் செய்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 4 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் நடந்ததோடு, இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை விழுந்த சம்பவம் மதியமே தெரியவந்த நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் தீயணைப்புத்துறை வீரர்களும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.
இதுகுறித்து பேசிய அம்மாநிலத்திற்குட்ப்பட்ட சுரோஹி மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தைக்கு உடனடியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து குழந்தை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்ததால் 8 மணி நேரத்தில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
