'திருமணம் நடந்த முதலிரவு'... 'திடீரென நெஞ்சிறைக்க ஓடி வந்த உறவினர் சொன்ன தகவல்'... அதிர்ந்துபோன புதுமண தம்பதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 26, 2020 01:21 PM

திருமணம் முடிந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த தம்பதியருக்கு வந்த செய்தி, அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுத்தது.

Newly Wed couple lose jewellery, car on wedding night

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் குர்பன் அகமது. இவரது மகனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு வெகு விமரிசையாக நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து உறவினர்களுடன் புதுமண தம்பதியர் பேசிக் கொண்டு இருந்தார்கள். இதையடுத்து தங்களது புது வாழ்க்கையை ஆரம்பிக்க தங்களின் அறைக்குச் செல்ல இருவரும் தயாரானார்கள். அப்போது தம்பதியரின் உறவினர் ஒருவர் தலைதெறிக்க ஓடி வந்தார்.

உறவினர் ஓடி வருவதைப் பார்த்த தம்பதியர் மற்றும் அவரது பெற்றோர் எதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார்கள். அப்போது அந்த உறவினர், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் புதிய கார் ஆகியவற்றைக் காணவில்லை எனவும் அதை யாரோ திருடிச் சென்று விட்டார்கள் எனக் குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இதைக் கேட்ட புதுமண தம்பதியர் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

Newly Wed couple lose jewellery, car on wedding night

எல்லாம் நல்லபடியாக முடிந்தது என நினைத்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த மணமக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. உடனே இந்த தகவல் காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்கள். திருமண வீட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எப்படி இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கும் எனப் பலருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நகைகளை வேண்டுமானால் மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருக்கலாம், ஆனால் காரும் சேர்ந்து திருடு போனது தான் பெரும் புதிராக மாறிப்போனது. இதனால் காவல்துறையினரின் சந்தேக பார்வை திருமண வீட்டிலிருந்தவர்கள் மீதும் விழுந்துள்ளது. எனவே விசாரணைக்கு பிறகே இதில் இருக்கும் மர்மம் வெளியில் வரும் என போலீசார் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Newly Wed couple lose jewellery, car on wedding night | India News.