டிப்டாப் டிரஸ்.. அப்போதான் ‘சந்தேகம்’ வராது.. சிக்கிய ‘கேரள தம்பதி’.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தங்க நகை வாங்குவது போல் வந்து ஊழியர்கள் அசந்த நேரத்தில் கேரள தம்பதி நகைக்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் பவிழம் ஜூவல்லரி கடையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த சுதீஷ்-ஷானி தம்பதியினர் நகை வாங்க வந்துள்ளனர். நீண்ட நேரமாக கடையில் பல நகைகளை பார்த்த அவர்கள் நகை ஏதும் வாங்காமல், நாளை வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
அவர்கள் சென்றபின் நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது 4 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அங்கிருந்து சென்ற கேரள தம்பதியை ஊழியர்கள் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டு அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு தம்பதியினரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, திருடப்பட்ட நகையை கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகம் வராதபடி டிப்டாப்பாக உடையணிந்து, கடைகளில் திருடுவதை இந்த தம்பதி வாடிக்கையாக கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
