‘5 வருசத்துல 3 முறை வெள்ளம்’.. 2 நாளா வெளுத்து வாங்கிய மழை.. தரைத்தளம் வரை சூழ்ந்த மழைநீர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் தரைத்தளம் வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர், தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரு தினங்களாக கனமழை பெய்தது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரும் திறக்கப்பட்டது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதியான முடிச்சூரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதி என்பதால் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் முடிச்சூர் பகுதி 3 முறை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.