'கல்யாணத்திற்கு முன் ஷாக் கொடுத்த காதலி'... 'ஆனாலும் இதுதான் என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான நாள்!!!'... 'கடைசியில் காத்திருந்த ஹேப்பி டிவிஸ்ட்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய திருமணம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

பிரேசிலைச் சேர்ந்த டியோகோ ராபெலோ என்பவருக்கு அவருடைய காதலியுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண் அவருடன் பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து உடனடியாக திருமண ஏற்பாடுகளை நிறுத்தலாமென குடும்பத்தினர் கூற அதற்கு மணமகன் டியோகா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் மணமகளே இல்லையென்றாலும் திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என உறுதியாக கூறிய டியோகோ, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் குறித்த தேதியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். உறவினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதுதொடர்பான டியாகோ ராபெலோவின் இன்ஸ்டாகிராம் பதிவில், "என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவழித்தேன். மிகவும் சோகமான அந்த நாளை நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றினேன். என்னை நானே அதிகம் காதலிப்பது அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
