'இப்படியே இருந்தா எப்படி? எப்பதான் கல்யாணம் பண்ண போறிங்க?' .. ‘மனம் திறந்த’ நியூஸிலாந்து பிரதமர்.. காதலர் யார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி 2வது முறையாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜெசிந்தா அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தற்போது 40 வயதாகும், ஜெசிந்தா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் கிளார்க் கேஃபோர்ட்டை நீண்ட காலமாக இவர் காதலித்து வரும் நிலையில், திருமணத்துக்கு முன்னரே, இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரதமர் பதவியில் உள்ள போது, குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்த போது, குழந்தைப் பெற்றார்.
ஜெசிந்தா ஆர்டர்ன், கிளார்க் கேஃபோர்ட்டின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு மோதிரம் மாற்றிநடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், தமது திருமண நாள் இன்னும் நிச்சயிக்கப்படவில்லை என்றும் திருமண திட்டங்கள் உள்ளன, ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், எங்களது திட்டங்களை குடும்பத்தினருடன், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது என்றும் நியூ ப்ளைமெளத் நகரில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெசிந்தா ஆர்டர்ன் பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
