'6 கர்ப்பிணி பெண்களுடன் திருமணத்திற்கு வந்த நபர்'... 'என்னங்க சொல்றீங்க'... அதிர்ச்சியான நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 26, 2020 12:11 PM

ஆறு கர்ப்பிணிப் பெண்களுடன் ஆண் ஒருவர் வந்த நிலையில் அவர் யாரெனத் தெரிந்ததும் இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் பறந்தன.

Social media celebrity Pretty Mike posed with his six pregnant wifes

நைஜீரிய நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகரான வில்லியம்ஸ்க்கும், பிரபல நடிகையான ஆஸ்கார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அந்த வகையில் பல சர்ச்சைகளுக்குப் பெயர்போன சமூகவலைத்தள பிரபலம், pretty mike தனது ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் கலந்து கொண்டார்.

நைஜீரியாவின் lagos நகரில் வசித்து வரும் இவர், நைட் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் திருமணத்தில் தனது 6 மனைவிகளுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைச் சிலர் வாழ்த்தினாலும், பல இணையவாசிகள் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள். இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இதன்காரணமாகவே  இவரைச் சர்ச்சை பிரபலம் எனப் பலரும் அழைப்பது உண்டு.

Social media celebrity Pretty Mike posed with his six pregnant wifes

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் இவர் ஐந்து பெண்களுடன் திருமண ஆடையில் போஸ் கொடுத்தார். அப்போதே கடும் விமர்சனத்திற்கு அவர் உள்ளான நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதிலும் சிலர் 90ஸ் கிட்ஸ்களின் பாவம் உங்களை சும்மா விடாது எனவும், கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags : #PRETTY MIKE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Social media celebrity Pretty Mike posed with his six pregnant wifes | World News.