VIDEO: கால்பந்து உலகை மிரளவைத்த மரடோனா!.. 'கடவுளின் கை' கோல் அடித்த தருணம்!.. 1986 உலகக் கோப்பை போட்டியில் என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Nov 26, 2020 11:54 AM

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மரடோனா (வயது 60) கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

maradona hand of god goal in 1986 world cup historical moment rip

அப்போது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மாரடோனா வீட்டில் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மரடோனா காலமானதாக அர்ஜென்டினா மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மரடோனாவின் மறைவு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மரடோனா மறைவுக்கு முன்னணி கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பையை வென்று சாதித்தது. அத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதி போட்டியில் மரடோனா தனது கையால் பந்தை தள்ளி கோல் அடித்தார்.

இதை நடுவர் கவனிக்க தவற அர்ஜென்டினா வெற்றி பெற்று, இறுதியில் அத்தொடரில் சாம்பியன் ஆனது. வெற்றிக்குப் பின், இது குறித்து பேசிய மரடோனா அந்த கை 'கடவுளின் கை' என வர்ணித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இன்று வரை மறக்க முடியாத நினைவாக உள்ளது.

மரடோனா 4 முறை உலக கோப்பையில் (1982, 1986, 1990, 1994) விளையாடி உள்ளார். 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maradona hand of god goal in 1986 world cup historical moment rip | Sports News.