'ஆபாச பேச்சு' வைரலான வாட்ஸ் அப் ஆடியோ... கல்யாணம் ஆகியும் 'காதல் வலை' வீசிய... சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாட்ஸ் அப் ஆடியோ வைரலானதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு சென்னை மாநகராட்சியில் என்ஜினியர் ஆக வேலை செய்து வந்த கமலக்கண்ணன் என்பவர் காதல் வலை வீசியிருக்கிறார். மேலும் கிளுகிளுப்பாக பேசி ஆடியோ ஒன்றையும் வாட்ஸ் அப்பில் மாணவிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த ஆடியோ வைரலானது.
திருமணமான கமலக்கண்ணனின் தொல்லை தாங்க முடியாமல் அந்த மாணவி சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகாரளித்து இருக்கிறார். தொடர்ந்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை ஐகோர்ட்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.

மற்ற செய்திகள்
