'இன்ஸ்பெக்டர்' உள்ளிட்ட 5 பேரும்... வேறு சிறைக்கு 'மாற்றம்' காரணம் என்ன?... வெளியான 'பகீர்' பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறையினர் 5 பேரும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்-ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடியில் உள்ள பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது பல்வேறு வழக்குகளில் சிக்கி பேரூரணி சிறையில் இருக்கும் பெரும்பாலான கைதிகள் எஸ்.ஐ ரகு கணேஷிடம் அடி வாங்கியவர்களாம்.
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரகு கணேஷை தாக்க வாய்ப்புகள் இருப்பதால் பாதுகாப்பு கருதி 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுவதால் யாரும் நெருங்க முடியாத வகையில் 5 பேரையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவினை சிபிசிஐடி இன்று எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரண நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மற்ற செய்திகள்
