“அவருக்கு பாதுகாப்பு வேணும்!”.. கார்ப்பரேஷன் இன்ஜினியர் ‘ஆபாச’ போன் ஆடியோ?... மாணவியின் மனுவால்.. பரபரப்பு திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 10, 2020 08:18 PM

கொரோனா தடுப்புப் பணியில் ஈட்டுபட்டிருந்த பெண்ணிடம் மாநகராட்சி அதிகாரி தவறாக எதுவும் கூறவில்லை என பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

college girl explain over corporation engineer conversation audio

கல்லூரி மாணவ-மாணவிகளை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தன்னார்வலர்களாக சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வரும் சூழலில் மண்ணடி பகுதி மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன், அங்கு களப்பணியாளராக பணிபுரிந்து வந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் ஆபாசமாக போன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி வலைதளங்களில் பரவியது.

இதனை அடுத்து கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டதோடு, உயர்நீதிமன்ற  அனைத்து மகளிர் போலீஸார் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் கமலக்கண்ணன் தலைமறைவாகி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையரிடம் தற்போது மனு ஒன்றை அளித்துள்ள அந்த கல்லூரி மாணவி கமலக்கண்ணன் தனது குடும்ப சூழலை அறிந்து தனது மேல்படிப்புக்காக உதவியதாகவும், எதிர்கால ஆலோசனை குறித்து தன்னிடம் பொதுவாக பேசிவந்ததாகவும், தன்னிடம் தவறான எண்ணத்தில் பழகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தனது எதிர்கால திருமண வாழ்க்கை குறித்து  கமலக்கண்ணன் தன்னிடம் பேசிய ஆடியோவைதான் சமூக விரோதிகள் சிலர் திருடி, தன்னை பகடைக்காயாய் பயன்படுத்தி கமலக் கண்ணனை தவறாக சித்தரித்து வருவதாகவும் அவர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். மற்றபடி, கமலகண்ணன் ஆபாசமாக பேசுவதாக மாநகராட்சி மற்றும் காவல்துறையில் தான் எந்த புகாரும் அளிக்கவில்லை என்பதால், கமலக்கண்ணன் மீது போட்ட பொய் வழக்கை ரத்து செய்து அவருக்கு உரிய பாதுகாப்பினை அளிக்கவேண்டும் என்றும் அதில் அந்த கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. College girl explain over corporation engineer conversation audio | India News.