"உங்க கடைசி ஆசை என்ன?..." 'மௌனம்' காக்கும் 'நிர்பயா' குற்றவாளிகள்... பதிலுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 24, 2020 11:06 AM

தூக்கில் போடப்பட இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்று திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை.

What is the last wish of the Nirbhaya criminals?

4 பேருக்கும் சிறையில் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரோ உத்தரவிட்டார். பொதுவாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் குற்றவாளிகளிடம், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்கப்படுவது வழக்கம். அதன்படி முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்பதை தெரிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர்.

உறவினர்களில் யாரையாவது சந்திக்க விரும்புகிறார்களா? அவர்களது உடைமைகளை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்? என்பது பற்றியும் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசி ஆசை என்ன என்பதை அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அதை நிறைவேற்ற முடிந்தால் அதுபற்றி சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. அவர்களுடைய பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #NIRBHAYA #MURDER CASE #CRIMINALS #TIHAR #LAST WISH