"வளர்ப்பு நாய் குரைச்சுகிட்டே இருக்கு!".. அதிகாலையில் மருத்துவமனை.. சிரஞ்ச், மயக்க மருந்து.. குடும்பத்தினரை கொன்று, தற்கொலை செய்த பெண் மருத்துவர்.. அதிர்ச்சி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் நாய்க்கு போடும் விஷ ஊசியை கணவன் மற்றும் இரண்டு குழந்தைக்கு போட்டு பெண் மருத்துவர் ஒருவர் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல கல்லூரி விரிவுரையாளர் டிராஜ் ரானே. இவரது மனைவியான மருத்துவர் சுஷ்மா ரானே, தமது 11 வயது மகன் துருவ் மற்றும் 5 வயது மகள் வாரியா, டிராஜ் ரானேவின் வளர்ப்புத்தாய் பிரமிளா மற்றும் கணவர் டிராஜ் ரானே உள்ளிட்டோருக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்து பின்னர் விஷ ஊசி போட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன் சுஷ்மா எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பு கடிதம் கிடைத்தது. அதில் தினமும் கொரோனா மரணங்களை பார்க்க முடியவில்லை என்பதால் அனைவரும் மரணத்தைத் தழுவுகிறோம் என்று குறிப்பிட்டிருந்துள்ளார்.
பின்னர் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில்தான் சுஷ்மா விஷ ஊசி போட்டு கொன்ற தகவல் தெரிய வந்தது. இந்த நிலையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சுஷ்மா தனது மகளுடன் அதிகாலை 5.30 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். அங்கு ஒரு சிரஞ்ச் மற்றும் மயக்க மருந்து உள்ளிட்டவற்றை மெடிக்கல் சென்டரில் வாங்கியுள்ளார். மருத்துவமனையிலிருந்த செவிலியரிடம் வீட்டில் வளர்த்து வரும் நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருப்பதாகவும், அதனால் அந்த நாய்க்கு மயக்க மருந்து தேவை என்றும் கேட்டு வாங்கி உள்ளார். அவர்களும் சுஷ்மா ஒரு மருத்துவர் என்பதால் வீரியமிக்க மயக்க மருந்தினை கொடுத்துள்ளனர்.
வீட்டிற்கு வந்து உணவில் அனைவருக்கும் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மகன் ஆகியோருக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளார். பின்னர் தனது மகளுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார். மூவரும் இறந்த பின்னர், குழந்தைகளின் கைகளில் இரண்டு வெள்ளை நிற பூக்களை வைத்து விட்டு குழந்தைகளின் மீதான அன்பை வெளிப்படுத்தி விட்டு, மேற்கூறிய தற்கொலை குறிப்புகள் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துவிட்டு பின்னர் தற்கொலையை தழுவினார்.
காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த டிராஜ் ரானே மற்றும் சுஷ்மா ரானே மகிழ்ச்சியாகவே இருந்ததாக பக்கத்து வீட்டார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
