“சாதாரண வேலையில இருந்தேன்!”.. பெண்ணை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜாக்பாட் மழை!.. அதன் பின்னர் பகிர்ந்த ‘விநோத ஆசை’!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் பெண் ஒருவருக்கு லாட்டரியில் 5 லட்சம் டாலர்கள் பரிசு விழுந்த அவரை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவின் nanaimo நகரைச் சேர்ந்த Debra Allen என்கிற பெண் கடந்த மாதம் 28 ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். அவருக்கு அந்த லாட்டரியில் பரிசு விழுந்த தகவலை அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர் முதலில் அவரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பரிசு விழுந்த தகவல் தனக்கு தெரிந்ததை அடுத்து தன் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து தானும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “எனக்கு லாட்டரியில் பெரிய பரிசு வெல்ல வேண்டும் என்கிற கனவு எப்போதும் இருந்து வந்தது. இப்பரிசு பணத்தில் பெரும் பகுதியை ஓய்வு காலத்துக்கு பின்னர் நான் என் கணவருடன் சேர்ந்து செலவிட திட்டமிட்டுள்ளேன். இதோடு வீடு போல அனைத்து வசதிகளையும் கொண்ட ரிக்கிரியேஷன் வாகனம் வாங்கும் விநோத ஆசையையும் திட்டமிட்டிருக்கிறேன். ஏனென்றால் வான்கூவர் தீவில் முகாமிடும் ஆசை எனக்குள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
