'மூன்று திருமணம்!.. 3 கணவர்களிடமும் 'அதே' பிரச்னை'!.. கர்ப்பமா இருக்குற இந்த நேரத்துல... இப்படி ஒரு முடிவா!?..
முகப்பு > செய்திகள் > இந்தியாமூன்று திருமணம் செய்த பெண், அவரது மூன்று கணவர்கள் மீதும் காவல் நிலையத்தில் ஒரே புகாரை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் 3-வது திருமணம் செய்து கொண்ட பெண் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்தவர் ரவளி. கடந்த 2015 ஆம் ஆண்டு அன்னாரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து, பெரியவர்கள் நிச்சியத்தபடி சுரேஷை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், மூன்று மாதங்களில் சுரேஷ் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடை பெற்று மூன்று லட்ச ரூபாய் சுரேஷிடம் இருந்து பணம் பெற்று கொண்டு ரவளிக்கும் சுரேஷுக்கும் விவாகரத்து ஆனது.
இதை தொடர்ந்து, கொய்யூரூ கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவரை ரவளி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்ற ஐந்து மாதங்களான நிலையில், சீனிவாஸ் மீது வரதட்சணை கேட்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரிடம் இருந்து மூன்று லட்ச ரூபாய் போலீசார் மூலம் பெற்று கொண்டார். இந்நிலையில் மனகொடூரை சேர்ந்த சுரேஷை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான சில மாதங்களிலேயே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு அந்த பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறி தனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் எனக் கூறி போலீசார் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏற்கனவே 2 திருமணம் செய்தது உண்மையே. தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சுரேஷ்க்கு திருமணத்திற்கு முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார்.
எனினும், தற்பொழுது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.