இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பு மருந்து எப்போது தயாராகும்?,,.. வெளியான லேட்டஸ்ட் 'அப்டேட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் பல மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தான 'கோவாக்சின்' தடுப்பு மருந்து இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்'க்கு ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில், இந்தியாவின் கொரோனா தொற்றின் நிலை குறித்தும், தடுப்பு மருந்து குறித்த விவரங்களையும் தெரிவித்தார்.
அந்த பேட்டியில், 'இந்தியா பெரிய நாடாக இருப்பதால், வெவ்வேறு மாநிலங்களில் நோய் பாதிப்பிற்காக பல காரணங்களை கொண்டுள்ளது. இதனால் பாதிப்புகள் எப்போது குறையும் என்பதை கணித்து சொல்வது மிகவும் கடினம். கொரோனா தொற்றுக்கு எதிராக, தடுப்பு மருந்துகளின் சோதனைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன' என்றார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்து குறித்து ஹர்ஷ் வர்தன் கூறுகையில், 'இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தின் செயல்திறன் குறித்து இந்தாண்டு இறுதிக்குள் தெரிய வரும். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஏற்கனவே ஒரு இணையான முடிவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற இரண்டு தடுப்பு மருந்துகளின் உற்பத்திக்கு ஒரு மாதமாவது தேவைப்படும். அதன் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்தால், 2021 முதல் காலாண்டில் பயன்படுத்த தயாராக இருக்கும்' என்றார்.
ஹைதராபாத்தில் அமைந்துள்ள மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கக் கூடும் என அமைச்சர் ஹர்ஷ்வரதன் குறிப்பிட்டுள்ளார்.