‘3 மாதத்தில் 2ம் கணவரை பிரிந்து’.. நகை, பணம், காருடன் மாயமான பணக்கார பெண்.. 4 வருடம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 18, 2020 01:44 PM

இந்தியாவில் 2-வது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் நான்கு வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்து லாட்ஜ் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.

kerala millionaire daughter akhila parayal mystery lodge death

கேரளாவில் கன்னூரைச் சேர்ந்த அகிலா பரயில் என்பவர் இவர் தனது முதல் கணவரை 2016-ல் விவாகரத்து செய்த பின்னர் இரண்டாவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரை மணந்துள்ளார். ஆனாலும் மூன்று மாதங்களில் அவரைப் பிரிந்த அகிலா பின்னர் சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து 30 லட்சம் ரூபாய் பணம் 40 சவரன் நகைகள் உள்ளிட்டவற்றுடன் காரையும் எடுத்துக்கொண்டு அகிலா மாயமானார்.

இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அகிலா தனது உறவினர்களை மீண்டும் சந்தித்துள்ளார். ஆனால் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த அவர், அந்த ஹோட்டல் அறையில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அகிலா சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு அளித்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையைத் தொடங்கினார்.

இதுபற்றி பேசிய போலீசார் விவாகரத்துக்கு பின்னர் நகைகள், பணத்துடன் சென்ற அகிலா ஊர் திரும்பிய போது மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் அத்துடன் அவரிடம் பணம் நகைகள் உள்ளிட்ட எதுவும் இல்லை என்றும் தற்கொலை குறித்து உறவினர்கள் யாரும் புகார் அளிக்க முன் வராத நிலையில் போலீசார் தாமாக முன்வந்து இதுபற்றி விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மிகப்பெரும் பணக்காரரான அகிலாவின் தந்தை நல்ல நிதிநிலையில் இருந்ததால்தான் அவருக்கு அவ்வளவு பணம், நகைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே இந்த நான்கு ஆண்டில் காசர்கோடு, கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று அகிலா சென்றதாகவும், அங்கு யார் யாருடன் எல்லாம் சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? எப்படி சென்றார்? உள்ளிட்ட விவரங்களை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala millionaire daughter akhila parayal mystery lodge death | Tamil Nadu News.