'இதுக்குமேல மறைக்க விருப்பமில்ல'... 'மருத்துவர் வீட்டில் வீசிய துர்நாற்றம்'... 'உடைத்துப் பார்த்தபோது கடிதத்துடன் காத்திருந்த அதிர்ச்சி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மருத்துவர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த மோஹித் சிங்கலா (40) என்பவருடைய வீட்டில் துர்நாற்றம் வீச, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்து கதவை உடைத்துப் பார்த்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த மோஹித்தின் உடலை மீட்டுள்ளனர். அத்துடன் மோஹித் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், "இது என்னுடைய வாழ்க்கை. அதனால் நான்தான் முடிவு செய்வேன். எனக்கு 60-70 வயது வரை வாழ விருப்பமில்லை. என்னுடைய மனநிலையை இதற்கு மேல் மறைக்க விருப்பமில்லை" என எழுதி இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவர் ஒருவர் வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
