3 முறை ABORTION ஆயிடுச்சு!.. 'இது' தான் எங்க 'கடைசி நம்பிக்கை'!.. வாரிசுக்காக ஏங்கித் தவிச்ச எங்களுக்கு... கடவுள் கொடுத்த மிகப்பெரிய 'ட்விஸ்ட்'!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றுள்ளார்.

அவற்றில் இரண்டு பெண் குழந்தைகள் இரட்டையர்கள் மற்றும் 2 ஆண் குழந்தைகளும் இரட்டையர்கள். மொத்தம் 2 ஜோடி இரட்டையர்களை பெற்றெடுத்துள்ளார்.
ஹூபே மருத்துவமனையில் 32 வாரங்களில் இந்த குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளன.
இது குறித்து பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் 3 முறை குழந்தை பெற முயற்சி செய்து கர்ப்பம் கலைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது 'கடவுளிடமிருந்து வந்த ஆசீர்வாதம்' எனக் கூறியுள்ளார்.
ஒரு ஜோடி இரட்டையர்கள் ஆகஸ்ட் 12 அன்று 9:28 மணிக்கு பிறந்ததாகவும், அவர்களை தொடர்ந்து ஒரு நிமிடம் கழித்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை, மற்றொரு ஜோடி இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.
இது தொடர்பாக ஹூபே மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ இயக்குநர் டாக்டர் லி ஹுவா கூறுகையில், இது மிகவும் அரிதான பிரசவம். ஒரு பிரசவத்தில் இரண்டு ஜோடி இரட்டையர்கள் பிறந்துள்ளனர் என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
