கர்ப்பமா? வீக்கமா?.. வயிறு மட்டும் 19 கிலோ!.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து... அதிர்ந்த போன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் உள்ள ஒரு பெண்ணின் வயிறானது பெரிய அளவில் வீங்கியதால் அவர் தூங்கக்கூட முடியாமல் வேதனை அடைந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் குவாக்சியன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது வயிறு தற்போது வரை வீங்கிக் கொண்டு சென்றிருக்கிறது. இவரது எடை தற்போது 121 பவுண்டாக இருக்கிறது. இதில் அவரது வயிறு மட்டுமே 44 பவுண்ட் (19 கிலோ) எடைக்கொண்டதாக இருக்கிறது. இவர் கடந்த இரண்டு வருடமாக இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறார். வயிறு பெரிதாகி வலி ஏற்பட்டவுடன் ஹுவாங் மருத்துவ உதவியை நாடியுள்ளார். மருத்துவர்கள் வலியை குறைப்பதற்கு மருந்துகளை தந்துள்ளனர். மருந்துகளின் மூலம் வயிறு வலி குறைந்த போதிலும், அவரது வயிறானது வீங்கிக் கொண்டே சென்றுள்ளது.
அவரது உடல்நிலையை ஆராய்ந்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், அடிவயிறு மற்றும் மார்பு ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாகுதல் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், அவர்களால் வயிறு ஏன் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து ஹுவாங் கூறும்போது, "எனது வயிறு இப்படி வீங்கி இருப்பதால் என்னால் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. எனது இரு குழந்தைகளை கவனிப்பதென்பது பெரும் சிரமமாக உள்ளது. நான் தெருவில் நடந்துச் செல்லும் போது என்னை மக்கள் கர்ப்பிணியாக பார்க்கிறார்கள் குழந்தைகளை அவரது தாத்தாவும் பாட்டியும் கவனித்துக் கொள்கிறார்கள். நான் சீக்கிரம் இந்த நோயிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன்" என்றார்.
ஹுவாங் குவாக்சியன் அண்மையில் சமூக வலைதளங்களில் தனது நிலைமையை வெளிப்படுத்திச் சிகிச்சைக்காக பண உதவி ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
