VIDEO: ‘நீ அங்கேயே இரு, தோசை தட்டுக்கே வரும்’.. கல்தோசை தெரியும், இது என்ன காத்துல பறக்குற தோசை? வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 17, 2021 06:42 PM

சுடச்சுட தோசை சுட்டு அதை வாடிக்கையாளர்களின் தட்டுக்கே பறக்க விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mumbai man\'s flying dosa technique goes viral

மும்பை மங்கல்தாஸ் மார்கெட் பகுதியில் ஸ்ரீபாலாஜி தோசா என்ற சாலையோர உணவகம் ஒன்று உள்ளது. அங்கு விறுவிறுப்பாக தோசை சுடும் இளைஞர், அதை நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார். இதனை அங்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிரப்பட்ட இந்த வீடியோவை, இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 13 லட்சம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் செய்துள்ளனர். கல்தோசை பார்த்திருப்போம், ஆனா காற்றுல பறந்து வரும் தோசையை இங்கதான் பார்க்கிறோம் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mumbai man's flying dosa technique goes viral | India News.