“என்ன நடக்குது டெல்லியில?” - விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கொந்தளித்த ‘முன்னாள் ஆபாச பட நடிகை’ மியா கலிஃபா!.. ‘தீயாய்’ பரவும் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > உலகம்டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதமான அமைப்புகளும் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அண்மையில் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த ஒரு முக்கிய விவசாயிகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தனர்.
எனினும் எஞ்சியிருந்த விவசாயிகள் சங்கத்தினர் நடத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பேசும் கிரேட்டா தன்பெர்க் எனும் இளம் சிறுமி தொடங்கி, பல்வேறு உலக பிரபலங்கள், நட்சத்திரங்கள் வரை இந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் நிற்பதாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் ஆபாச பட நடிகையும், உலக பிரபலமுமான மியா கலிஃபா தமது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக பதிவிட்டிருக்கிறார்.
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
மேலும் தனது ட்வீட்டில், “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறதா? அங்கு என்ன மாதிரியான மனித உரிமை மீறல் நடக்கிறது?
What in the human rights violations is going on?! They cut the internet around New Delhi?! #FarmersProtest pic.twitter.com/a5ml1P2ikU
— Mia K. (Adri Stan Account) (@miakhalifa) February 3, 2021
நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பணம் கொடுத்து நடிக்க வைக்கப்படுகிறார்கள் எனும் கருத்துக்கு எதிராகவும் தனது ட்வீட்டை மியா பதிவு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
