VIDEO: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரை இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் ஒரண்டை இழுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக ஊடகமான டிக்டாக்கில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட ஒரு வீடியோ பிரிட்டானியா முழுவதும் வைரலானது. அதில் அந்நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகர் chris whittyயை victoria station அருகே உள்ள strutton ground marketல் பின்தொடர்ந்துள்ளார் இளைஞர் ஒருவர்.
அங்கு சென்ற இளைஞர் chris whittyயை மரித்து, நிற்க வைத்து திகைப்பை ஏற்படுத்தினார். பின்னர் தனது டிக்டாக்கில் அந்த இளைஞர் chris whittyயை எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில்chris whittyயை “இங்கு நின்று கொண்டிருக்கும் இந்த மனிதர் ஒரு பொய்யர்’ என்று குற்றம் சாட்டி அதிர்ச்சியை கிளப்புகிறார்.
வேறு வழியில்லாமல் chris-ம் அந்த இளைஞரது செயலை சகித்துக் கொண்டு அமைதி காத்து அந்த இடத்தில் எதுவும் நின்றுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பிரிட்டன் சுகாதார செயலாளர் matt hancock, சிறந்த புகழ்பெற்ற விஞ்ஞானியான chris whitty அனைவராலும் மதிக்கப்பட வேண்டியவர்.
அவருக்கு நடந்த இந்த சம்பவம் பரிதாபத்துக்குரியது. அந்த இளைஞரை வன்மையாக கண்டிக்கிறோம் என தமது கண்டனத்தை தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
