‘விடியற்காலையில் கருவறையைத் திறந்ததும் ஆச்சரியம்!’ - பூசாரி சொன்ன பரபரப்பு தகவல்.. கோவிலில் மளமளவென குவிந்த பக்தர்கள்!.. ‘இந்த நிகழ்வால் கொரோனா முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை!’
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் கோவில் ஒன்றில் சிவலிங்கம் கண்களைத் திறந்ததாக தகவல்கள் பரவியதை அடுத்து அந்த சிவலிங்கத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் கோகக் எனும் ஊரில், திங்கள் கிழமை அன்று விடியற்காலையில் கோவிலின் கருவறையில் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்ததாக பூசாரி குறிப்பிட்டிருக்கிறார்.
காரணம் சிவலிங்கத்தின் கண்கள் திறந்து இருந்தது தான் என்று கூறி இந்த தகவலை பூசாரி சாத்தப்பா பதிவு செய்திருக்கிறார். இது தகவல் வெளியானதை அடுத்து இந்த காட்சியை காணும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இதே சிவலிங்கத்தின் கண்கள் கடந்த 2004ஆம் வருடம் திறந்ததாகவும், அப்போது கர்நாடகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த டெங்கு காய்ச்சல் உடனடியாக முடிவுக்கு வந்ததாகவும், இதேபோல் இப்போது இந்த சிவலிங்கம் கண்திறந்து இருப்பதால் தற்போது இந்தியா உட்பட உலக நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சாத்தப்பா தெரிவித்துள்ளார்.