‘இது வெறும் ரயில் மட்டும் இல்ல’.. ஒரே போட்டோவுல எல்லோரையும் உருக வச்சிட்டியேப்பா.. இதயத்தை வென்ற இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 03, 2021 05:53 PM

மின்சார ரயிலை தொட்டு வணங்கிய இளைஞரின் புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

Man bowing local train before boarding goes viral

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மும்பை புறநகர் ரயில்சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிப்ரவரி 1ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்படும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டதும், இளைஞர் ஒருவர் ரயிலை தொட்டு வணங்கி உள்ளே சென்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அன்றாட மக்களின் ஒரு அங்கமாக உள்ள மின்சார ரயில், தங்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man bowing local train before boarding goes viral | India News.