"அண்ணே, நெறய 'டிசைன்' டிசைனா 'நகை' எல்லாம் காட்டுங்க..." 'கண்' இமைக்கும் நேரத்தில் நடந்த 'அதிர்ச்சி'... 'சிசிடிவி'யில் பதிவான 'பரபரப்பு' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை நகரில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில் ஒரு நபர் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளராக வந்த அந்த நபர், அங்கிருந்த கடை ஊழியர் ஒருவரிடம் பல்வேறு டிசைன்களில் நகைகளை காட்டும் படி கூறினார். அதன் படி, ஒரு பெட்டிக்குள் வித விதமாக இருந்த சில நகைகளை பார்த்துக் கொண்டே இருந்த நிலையில், வேறொரு நகையை எடுக்க ஊழியர் முயற்சி செய்த நிலையில், அடுத்த கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த நகையைத் திருடிக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஊழியர், அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், அதனைக் கொண்டு நகையைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
