'எனக்கு உடம்பு சரி இல்லங்க'... 'எப்போதும் கணவனை தவிர்த்த புதுமணப்பெண்'...'சரி, ஹெல்த் செக்கப் போலாம்'... மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 23, 2021 03:59 PM

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியின் உண்மை முகம் தெரிய வந்த நிலையில் கணவன் நிலைகுலைந்து போனார்.

Months After Marriage, Man Learns Wife is a Transgender

உத்தரப்பிரதேசத்தின் சாஸ்திரி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே மாவட்டத்தின் பான்கி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் எண்ணத்தில் அந்த இளைஞர் இருந்துள்ளார்.

Months After Marriage, Man Learns Wife is a Transgender

இதையடுத்து தாம்பத்திய உறவுக்குக் கணவன் பலமுறை முயன்றுள்ளார். ஆனால் மனைவி தனக்கு உடல் நிலை சரியில்லை என ஒவ்வொரு முறை அவர் முயற்சி செய்யும் போதும் ஒவ்வொரு காரணம் சொல்லி விலகிச் சென்றிருக்கிறார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் துவங்கும் போது கணவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் கடுமையான மன உளைச்சலுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அந்த இளைஞர் முடிவு செய்தார். இதையடுத்து தனது மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று தனது அனுபவத்தையும், தனது சந்தேகத்தையும் கேட்டுள்ளார். மருத்துவர் அவரது மனைவியைப் பரிசோதித்து விட்டுச் சொல்வதாக அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

Months After Marriage, Man Learns Wife is a Transgender

இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் மருத்துவரே அதிர்ந்து போனார். காரணம் அந்த இளைஞரின் மனைவி ஒரு பெண் அல்ல அவர் ஒரு திருநங்கை எனத் தெரியவந்தது. இதைக் கேட்டு கணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏன் இத்தனை நாள் என்னை ஏமாற்றினாய் எனக் கதறித் துடித்தார். இதனிடையே திருநங்கை மீதும் அவரது குடும்பத்தினர் மீதும், தங்களை ஏமாற்றி விட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #TRANSGENDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Months After Marriage, Man Learns Wife is a Transgender | India News.