VIDEO: ‘தெறித்த கண்ணாடி’!.. ரசிகரின் முகத்தைப் பதம் பார்த்த பந்து.. இவ்ளோ வெறித்தனமா அடிச்ச வீரர் யாருப்பா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து வீரர் ஒருவர் சிக்சருக்கு விளாசிய பந்து ரசிகரின் முகத்தில் பலமாக விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
![WTC final: Tim Southee injures fan with his huge six WTC final: Tim Southee injures fan with his huge six](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/wtc-final-tim-southee-injures-fan-with-his-huge-six-1.jpg)
இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக துணைக்கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை கெயில் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது. இதனை அடுத்து நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் நேற்றும் மழை குறிக்கிட்டதால் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது.
அப்போது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து வீரர்கள் திணறினர். இதன்காரணமாக சொற்ப ரன்களின் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து அணி இழந்தது. தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியின் 100-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி அதை சிக்சருக்கு விளாசினார். அந்த பந்து கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்த ரசிகரின் முகத்தில் பலமாக விழுந்தது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
— Rishobpuant (@rishobpuant) June 22, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)