மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காக ‘தாம்பத்தியத்தை’ தள்ளிப்போட்ட கணவன்.. 2 வருசம் கழிச்சு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவி திருநங்கை என்பது தெரியவந்து, நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அன்புச்செல்விக்கும், கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அன்புச்செல்வி தடகள வீராங்கனையாக இருந்துள்ளார்.
அதனால் மேற்படிப்பு படித்து, விளையாட்டு பிரிவில் அரசு வேலை வாங்கும் வரை தாம்பத்யம் வேண்டாமென்று கணவர் செல்வத்திடம் அன்புச்செல்வி கூறியுள்ளார். மனைவியின் ஆசைக்கு செல்வமும் ஆதரவு கொடுத்துள்ளார். இதன்பின்னர் 2 ஆண்டுகள் தனது மேற்படிப்பை அன்புச்செல்வி முடித்துள்ளார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்ததால், மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்ள செல்வம் முயன்றுள்ளார்.
அப்போது தனது மனைவி திருநங்கை என்பது தெரியவந்து செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அன்புச்செல்வியின் பெற்றோரிடத்தில் இதுகுறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் செல்வத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த செல்வம், கடந்த 2015-ம் ஆண்டு திட்டக்குடி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விருதாச்சலம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார்.
இதனிடையே நடந்த மருத்துவ பரிசோதனையில் அன்புச்செல்வி திருநங்கை என்பது தெரியவந்தது. இதனால் செல்வத்தின் மனைவி அன்புச்செல்வி, அவரது பெற்றோர் அசோகன்-செல்லம்மாள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பளித்தார். திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
