‘லாக்டவுன் காலத்துல பட்ட வேதனை’!.. கேலி, கிண்டல்களை புறம் தள்ளி, மதுரையை கலக்கும் திருநங்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் தனி ஆளாக திருநங்கை ஒருவர் ஹோட்டல் நடத்தி அசத்தி வருகிறார்.
மதுரை ஆனையூர் அருகே உள்ள மல்லிகை நகரைச் சேர்ந்தவர் திருநங்கை நிலா. ஒரு காலத்தில் இவரும் சில திருநங்கைகளைப் போல கடைகளுக்குச் சென்று யாசகம் கேட்டு வந்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர் பட்ட வேதனைகள், வாழ்க்கையில் எப்படியாது சாதிக்கவேண்டும் என தூண்டியுள்ளது. இதனை அடுத்து தனது சொந்த முதலீட்டில் அசைவ ஹோட்டல் ஒன்றை திருநங்கை நிலா தொடங்கியுள்ளார்.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஹோட்டலை நடத்தி வரும் திருநங்கை நிலா, பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு தனது ஹோட்டலில் வேலை கொடுத்து ஆதரித்துள்ளார்.
மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போல திருநங்கைகளுக்கும் குழுக்கள் ஏற்படுத்தி உதவி செய்தால், தன்னைப்போல பல திருநங்கைகளும் தங்கள் வாழ்வில் முன்னேற வழிப்பிறக்கும் என நிலா கோரிக்கை வைத்துள்ளார். சமூக புறக்கணிப்பு, கேலி, கிண்டல்களை தனக்கான உத்வேகமாக எடுத்துக்கொண்ட திருநங்கை நிலா பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.