‘நாடகம் பார்க்கும் ஆசையில்..’ வாசலில் படுக்க வைத்துச் சென்ற தாய்.. ‘7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 31, 2019 11:17 AM

திருச்சியில் தாய் வாசலில் படுக்க வைத்துவிட்டுச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 year old girl raped in Trichy while mother was at drama

திருச்சியில் முசிறி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி 3 நாட்கள் அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அவர் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டு வாசலில் படுக்க வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்தச் சிறுமி அழுதுகொண்டே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியின் உடையில் ரத்தம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முசிறி போலீஸார் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே சிறுமியின் உடல்நிலை மோசமானதால் அவர் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Tags : #TRICHY #MUSIRI #MOTHERANDDAUGHTER #RAPE #7YEAROLD #GIRL #DRAMA