"நீ சச்சின் மகன்-ங்குறத மறந்துடு".. அர்ஜுன் டெண்டுல்கரின் கோச் போட்ட அதிரடி கண்டிஷன்.. ஆத்தாடி அவரா இது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 16, 2022 09:54 AM

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுக்கு ரஞ்சி கோப்பை அறிமுகத்திற்கு முன்னதாக பயிற்சி அளித்திருந்தார். அப்போது கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் பல கண்டிஷன்களையும் தான் விதித்திருந்ததாக தெரிவித்திருக்கிறார் யோகராஜ் சிங்.

Told Arjun he must forget he is Sachin Tendulkar son says coach

Also Read | ஆன்லைனில் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிச்சு.. பேஸ்புக்கில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து கரம்பிடிச்ச இந்திய இளைஞர்!!..

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறந்து, பல ஜாம்பவான்களையும் மிரள வைத்தவர் ஆவார். சச்சின் படைத்துள்ள சாதனைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்ற சூழலில், அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக தான் இருந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர், உள்ளூர் தொடர்களில் ஆடி வருகிறார். அப்படி ஒரு சூழலில், தற்போது ஆரம்பமாகி உள்ள ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காக ஆடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். இதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக, கோவா அணி மோதி இருந்தது. இதன் மூலம் ரஞ்சி தொடரில் அறிமுகமான அர்ஜுன் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.

Told Arjun he must forget he is Sachin Tendulkar son says coach

இதுகுறித்து பேசியுள்ள யுவராஜின் தந்தையும் பயிற்சியாளருமான யோகராஜ் சிங்,"செப்டம்பர் முதல் வாரத்தில், யுவியிடம் இருந்து (யுவராஜ்) எனக்கு அழைப்பு வந்தது, ‘அப்பா, அர்ஜுன் சண்டிகரில் இரண்டு வாரங்கள் இருப்பார், அவருக்கு பயிற்சி அளிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா என சச்சின் கேட்டுள்ளார்’ என்று கூறினார். நான் எப்படி சச்சினுக்கு மறுப்பு சொல்வேன் என்று சொன்னேன், அவர் என் மூத்த மகன் போன்றவர். ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை இருந்தது. நான் யுவியிடம், ‘எனது பயிற்சி முறை உனக்குத் தெரியும். எனது பயிற்சிமுறையில் யாரும் தலையிடுவதை நான் விரும்புவது இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், "அடுத்த 15 நாட்களுக்கு அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதை மறந்துவிட வேண்டும் என்று அவரிடம் கூறியிருந்தேன். அவன் அப்பாவின் நிழலில் இருந்து வெளியேற வேண்டும் என்று நான் சொன்னேன். அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்தபோது, ​​​​இவர் ஒரு அதிரடி ஆட்டக்காரராக இருப்பார் என்று நினைத்தேன். உடனே சச்சினுக்கும் யுவராஜுக்கும் மெசேஜ் செய்தேன். நான் சச்சினை அழைத்து, அர்ஜுனின் பேட்டிங்கில் ஏன் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கேட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Told Arjun he must forget he is Sachin Tendulkar son says coach

சண்டிகரில் அர்ஜுன் தங்கியிருந்த போது, தினமும் 5 மணிக்கு எழுந்து 2 மணிநேரங்கள் ரன்னிங். பின்னர் வெயிட் லிஃப்ட்டிங், பின்னர் கிரிக்கெட் பயிற்சி என கடுமையான டாஸ்க்குகளை வைத்திருந்தாகவும் யோகராஜ் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், யோகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜுன் டெண்டுல்கருடன் தான் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.

Also Read | "அந்த மேட்ச்-க்கு பிறகு.. பாகிஸ்தான்ல ஒரு கடைக்கு போனா கூட...".. முகமது ரிஸ்வான் சொன்ன உருக்கமான தகவல்!!

Tags : #ARJUN #ARJUN TEDULKAR #SACHIN TENDULKAR #COACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Told Arjun he must forget he is Sachin Tendulkar son says coach | Sports News.