"3 நாள் லீவு வேணும்.." உயர் அதிகாரிக்கு வாலிபர் எழுதிய 'கடிதம்'.. 'மனைவி' பத்தி அவர் எழுதுன காரணம் தான் 'ஹைலைட்டே'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு அதிகாரி ஒருவர், தனது உயர் அதிகாரிக்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதமும், அதில் இருந்த காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
![man leave application at work about wife gone viral man leave application at work about wife gone viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/man-leave-application-at-work-about-wife-gone-viral.jpg)
Also Read | போரை வென்ற காதல்.. உக்ரைன் காதலியை கரம்பிடித்த ரஷ்ய வாலிபர்.. கல்யாணம் நடந்த இடம் தான் 'செம'..
அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது வினோதமான அல்லது பலரையும் சிரிக்க கூடியது தொடர்பான செய்திகளின் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் இணையத்தில் தோன்றி அதிகம் வைரலாகும்.
உலகின் எந்த மூலையில் ஒரு சம்பவம் நடந்தாலும், அது சற்று வினோதமாக அல்லது வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படவும் செய்யும்.
அந்த வகையில், தற்போது அரசு அதிகாரி ஒருவர் தன்னுடைய உயர் அதிகாரிக்கு லீவ் கேட்டு ஹிந்தியில் எழுதிய கடிதம் தொடர்பான புகைப்படம் தான், பலர் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. கான்பூர் பகுதியை சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது உயர் அதிகாரிகளுக்கு விடுப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் எழுதிய கடிதம் ஹிந்தியில் இருந்த நிலையில், அதில் இருந்த காரணத்தில், "சமீபத்தில் நான் எனது மனைவியுடன் தகராறு செய்ததை தொடர்ந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு அவர் சென்று விட்டார். இதனால், நான் அதிகம் வேதனையும் மன அழுத்தமும் அடைந்தேன். நான் எனது மனைவியின் கிராமத்திற்கு சென்று, அவரை சமாதானம் செய்து அழைத்து வர வேண்டும். இதனால், எனது விடுமுறை விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என அந்த நபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு, 3 நாட்கள் விடுமுறையும் கேட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்த கடிதத்தை அந்த நபரின் உயர் அதிகாரியும் ஏற்றுக் கொண்டு, விடுமுறை அளிக்க முன் வந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மனைவியுடன் சண்டை ஏற்பட்டதால், அதனை சரி செய்ய விடுமுறை எடுத்தது மட்டுமில்லாமல், காரணத்தையும் அப்படியே விளக்கி அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)