"அந்த 7 மணி நேரத்த வாழ்க்கை'ல மறக்க மாட்டேன்.. " பயங்கரமான இரவு.. பீதியில் உறைந்த இளைஞர்!!..
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் இரவு முழுவதும் இளைஞர் அனுபவித்த பயங்கரம் ஒன்று, பலரையும் சில்லிட வைத்துள்ளது.

Also Read | "பள்ளி மாணவிகளுக்கு என்னங்க ஆச்சு??.." கும்பலாக கதறிய மாணவிகள்.. இந்தியாவை பீதியில் உறைய வைத்த சம்பவம்..
இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியை சேர்ந்த Azizul Rayhan என்பவர், அப்பகுதியில் உள்ள வர்த்தக மையம் ஒன்றில், தனிப்பட்ட தேவைகளுக்காக கடந்த சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார்.
அப்போது இரவு சுமார் 10:45 மணியளவில், லிப்ட் ஏறிய ரைஹான், தரை தளம் செல்ல வேண்டிய பட்டனை அழுத்தியுள்ளார்.
ஆனால், அப்போது தான் ஒரு அசம்பாவிதம் அங்கே நிகழ்ந்துள்ளது. அதாவது சற்று தூரம் வரை சென்ற லிப்ட், திடீரென நின்று போயுள்ளது. இதனால், பதறிப்போன ரைஹான், லிப்டில் இருந்த அவசர உதவிக்கான பட்டனையும் அழுத்தி உள்ளார். ஆனால், எவருமே அங்கு உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மேலும் பதறிய ரைஹான், லிப்ட் வேர் அறுந்து விழுந்து, கொஞ்ச நேரத்தில் உயிரிழந்து விடுவோம் என்றும் பதறி உள்ளார்.
தனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்றும், அதிகளவு ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் லிஃப்ட்டிலேயே இறந்து விடுவோம் என்றும் அவர் நினைத்துள்ளார். அவசர உதவி பட்டன் ஒருவேளை உதவி செய்திருந்தால், சுமார் 30 நிமிடங்களுக்குள் அவர் அங்கிருந்து வெளியேறி இருக்க முடியும். ஆனால் உதவிக்கு யாரும் வராத காரணத்தினால், இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் லிப்டில் தனியாக அவர் அவதிப்பட்டுள்ளார். தொடர்ந்து, மறுநாள் காலை சுமார் 5 : 45 மணியளவில், அந்த வர்த்தக மைய ஊழியர் ஒருவரால் அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக பேசிய ரைஹான், "இரவு முழுவதும் உதவிக்காக கத்திக் கொண்டிருந்தேன் ஆனால் யாருமே வரவில்லை. நான் மீட்கப்பட்டு அரை மணி நேரம் ஆன போதும் என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உறைந்து போயிருந்தேன். என் வாழ்வில் மிக கொடூரமான இரவு அது. என் மன வேதனையையும் விவரிக்க முடியாது" என கடும் பீதியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல லிப்டில் ஏழு மணி நேரத்திற்கு மேல் அவர் தனியாக இருந்து அவதிப்பட்டதால், உளவியல் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, போர்ட்ஸ்மவுத் பகுதி நகர நிர்வாகம், அவரிடம் மன்னிப்பு கோரி, தொழில்நுட்பக் கோளாறினால் உதவி தாமதமானதாகவும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அந்த வர்த்தக மையத்தில், ஒருவர் லிப்ட்டில் 7 மணி நேரம் சிக்கிக் கொண்டும், அங்குள்ள எவரும் அதனை கவனிக்கவில்லை என்பதும் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிப்ட்டில் ஒருவர் 7 மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம், படிப்பவர்களையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

மற்ற செய்திகள்
