"என்னை கேக்காம ஏன் வெள்ளைப்பூண்ட CUT பண்ண.?".. கோபத்துல கணவன் செஞ்ச காரியம்.. உறைந்த உறவினர்கள்.. நீதிமன்றம் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் தனது மனைவி தன்னிடம் அனுமதி பெறாமல் வெள்ளைப்பூண்டு உரித்ததற்காக அவரை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
Also Read | முன்னணி ஐடி நிறுவனங்களின் ஆஃபருக்கு No.. ரூ.50 லட்சம் சம்பளத்துல.. இளைஞர் தேர்வு செய்த நிறுவனம்.!
வெள்ளைப்பூண்டு
மத்திய பிரதேசத்தின் கண்வன் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பீபலிபடா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் பீலா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கிராமத்தில் வசித்துவந்த பிரகாஷ் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது அவரது மனைவி வெள்ளைப்பூண்டு உரித்துக்கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த பிரகாஷ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சோகம்
தன்னை கேக்காமல் வெள்ளைப்பூண்டை உரித்தது ஏன்? என பிரகாஷ் தகராறில் ஈடுபட கொஞ்ச நேரத்தில் சண்டை பெரிதாகிவிட்டது. அப்போது கோபமடைந்த பிரகாஷ் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும்,ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத பிரகாஷ் தனது மனைவி மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனால் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பாதிப்படைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால், அந்தப்பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார்.
கைது
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று பிரகாஷை கைது செய்தனர். மேலும், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரகாஷ் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிரகாஷ் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இருப்பதாகவும் அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த பிரகாஷ் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் தன்னை கேட்காமல் வெள்ளைப்பூண்டு உரித்த மனைவியை அவரது கணவனே கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.