"14 நாளா குளிக்கல.." TOILET பைப் தண்ணி தான் சில நாள் சாப்பாடு.. விமான நிலையத்தில் சிக்கித் தவித்த பயணி.. அதிர்ச்சி சம்பவம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 29, 2022 01:27 PM

இரண்டு வாரங்களாக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட நபர் ஒருவர், அங்கு சந்தித்த கடினமான நேரம் தொடர்பான விவரங்களை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

man trapped in airport for 2 weeks with no way out

Also Read | காலையில 4:30 க்கு Wakeup.. "என் கையால சமைச்சு.." 90 வயதில் சல்யூட் போட வைத்த 'Grandma'!!

இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் Abdoulie Jobe. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஜோபே, பிரான்ஸில் தனது குடும்பத்தினரை சந்தித்து, அங்கு விடுமுறை கழிக்கவும் சென்றுள்ளார். பின்னர் பாரிஸ் விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் இங்கிலாந்துக்கு திரும்ப முற்பட்ட நிலையில், அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால், விமான நிலைய நிர்வாகம் அவரை விமானத்தில் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

man trapped in airport for 2 weeks with no way out

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குடியுரிமை பெற்றது தொடர்பான பயோமெட்ரிக் குடியிருப்பு அட்டையை ஜோபே தொலைத்ததால், அவர் இங்கிலாந்து நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் என்னென்னவோ காரணம் சொல்லி, தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என நிரூபிக்க முயற்சி செய்தும், அது முடியாமல் போய்விட்டது. அதேபோல அவரிடம் விசா இல்லாத காரணத்தால் திரும்பி, விமான நிலையத்திலிருந்து வெளியேறி, பிரான்ஸ் பகுதிக்கும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

திடீரென விமான நிலையத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதன் காரணமாக கைவசம் இருந்த அனைத்து பணமும் செலவாகி உள்ளது. மேற்கொண்டு பணம் எதுவும் இல்லாமல் ஜோபே கடும் அவதிப்பட்டுள்ளார். உணவருந்த வழியில்லாமல், கழிவறையில் இருந்த குழாய் நீரை குடித்தும் தனது பசியினை போக்கி வந்துள்ளார். மேலும், இந்த 14 நாட்களும் குளிக்காமல் இருந்த ஜோப், விமான நிலையத்தில் சுற்றி திரிந்து வந்த நிலையில் உறங்க கூட முடியாமலும் அவஸ்தை பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமான நிலையம் என்பதால் எப்போதும் பயணிகள் அதிகம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், குளிக்காத அதிகம் நாற்றம் துர்நாற்றத்துடன் பயணிகள் அருகில் சென்றால், அவர்கள் விரக்தி அடையக் கூடும் என்பதால் அருகே செல்லாமல் ஒதுங்கி ஒதுங்கியும் ஜோபே நின்று வந்துள்ளார். இதன் காரணங்களாலே மற்றவர்களிடம் உதவி கேட்க முடியாத நிலை கூட ஜோபேவிற்கு உருவாகியுள்ளது.

man trapped in airport for 2 weeks with no way out

இதற்கு மத்தியில், தனது மகனின் 12-வது பிறந்தநாளையும் தவறவிட வேண்டிய நிலை, ஜோபேவிற்கு உருவானது. இறுதியில், பிரத்தானிய உள்விவகார அமைச்சகம் அனுமதி அளித்த பின்பு, அவர் பிரிட்டன் நாட்டில் இருப்பதை உறுதி செய்து, பின் அங்கிருந்து ஜோபே திரும்பி உள்ளார்.

இரண்டு வாரங்கள் விமான நிலையத்தில் சிக்கியது பற்றி பேசிய ஜோப், ஒரு நரகத்தில், சிறைவாசம் அனுபவித்தது போல இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "வயசு 27 ஆகுதுங்க.. ஆனா பாக்க சின்ன பையன் மாதிரி இருக்கேன்னு சொல்லி.." வேதனையில் புலம்பும் இளைஞர்..

Tags : #AIRPORT #MAN #NO WAY OUT #MAN TRAPPED IN AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man trapped in airport for 2 weeks with no way out | World News.