"சாக்ஸையும் கழட்டுங்க".. விமான பயணி மீது வந்த சந்தேகம்.. செக் பண்ண ஆபிசரே அரண்டு போய்ட்டாரு.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பயணி ஒருவர் சாக்சில் வைத்து தங்கம் கடத்த முயன்ற நிலையில் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்துவருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வாரணாசி விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தல் நடைபெற்றிருக்கிறது. இந்த கடத்தலில் ஈடுபட்டவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் நேற்று வழக்கம் போல பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவரை பரிசோதனை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். பின்னர் காலணிகளை அகற்றுமாறு பயணியிடம் கூறியுள்ளனர். அந்த பயணியும் தனது ஷூவை கழட்டவே, சாக்ஸையும் கழட்டுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி
வேறுவழியின்றி சாக்ஸை அந்த பயணி கழட்டும்போதுதான் அதிகாரிகள் அதிர்ந்து போயினர். சாக்ஸுக்கு கீழே கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட ஒரு பொருள் கீழே விழுந்திருக்கிறது. இதனை கண்ட அதிகாரிகள் உடனடியாக அதனை கைப்பற்றி பரிசோதித்தனர். அப்போது அதற்குள் தங்கம் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் அளவு 530 கிராம் இருப்பதாகவும் அதனுடைய சந்தை மதிப்பு 27 லட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இதனால் விமான நிலையம் சிறிது நேரம் சலசப்புடன் காணப்பட்டது.
முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த செவ்வாக்கிழமை தனியார் விமான நிலையத்தின் இருக்கைக்குள் பதுக்கப்பட்டிருந்த 600 எடை கொண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
On July 27, Team Customs LBSI Airport, Varanasi seized 530 grams of 99.50% pure foreign origin gold valued at Rs 27,33,105 from a pax coming from Sharjah. Gold was kept in form of brown paste in 2 black plastic pouches concealed by pasting them with each of the soles of his feet pic.twitter.com/3O6mxtskIX
— ANI (@ANI) July 27, 2022