Battery
The Legend

"வேலைக்கு சேர்ந்தா அங்க தான்.." 39 முறை பிரபல நிறுவனத்தில் முயற்சி... கடைசியில் வாலிபருக்கு காத்திருந்த 'சர்ப்ரைஸ்'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 27, 2022 05:03 PM

பொதுவாக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அடுத்து ஏதாவது ஒரு சிறந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கும்.

man rejected by google for 39 times and hired in 40th attempt

Also Read | DJ, ஆட்டம், பாட்டம்ன்னு களை கட்டிய திருமண விழா.. திடீர்'ன்னு நடந்த அசம்பாவிதம்.. களேபரமான கல்யாண வீடு

அப்படி வேலைக்காக பலரும் முயற்சி செய்யும் போது சிலருக்கு ஒன்றிரண்டு நேர்காணலில் உடனடியாக வேலை கிடைத்துவிடும்.

ஆனால், அதே வேளையில் இன்னும் சிலருக்கு வேலை கிடைக்கவே, சில நேரம் பல ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், துவண்டு போகாமல் தங்களால் ஆன முயற்சியை தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அப்படி அடுத்தடுத்து பல நிறுவனங்களில் தொடர்ந்து வேலைக்கு முயற்சி செய்வதை பார்த்திருப்போம். ஆனால், வாலிபர் ஒருவர் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் மட்டும், பல முறை வேலைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியில் நடந்த சம்பவம் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

man rejected by google for 39 times and hired in 40th attempt

Tyler Cohen என்ற வாலிபர் ஒருவர், உலக அளவில் முன்னணி நிறுவனமான கூகுளில் எப்படியாவது வேலைக்கு சேர வேண்டும் என விருப்பம் கொண்டுள்ளார். இதற்காக அவர் தொடர்ந்து கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்துள்ளார். ஆனாலும், 39 முறை அவர் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளார். பொதுவாக, ஒருவர் ஒரே நிறுவனத்தில் பலமுறை வேலைக்காக முயற்சி செய்யும் போது, அதில் சில முறை கைகூடவில்லை என்றால் உடனடியாக வேறு நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்வார்கள்.

ஆனால், டைலரோ கொஞ்சம் கூட துவண்டு போகாமல், தொடர்ந்து 39 முறை வேலைக்காக கூகுளில் விண்ணப்பித்து அதில் தோல்வியும் அடைந்தார். தான் ஏன் தேர்வாகவில்லை என்பதை ஆலோசித்து ஒவ்வொரு முறையும் அதை சரி செய்து பின்னர் தொடர்ந்து முயற்சி கொண்டே டெய்லர் இருக்க, கடைசியாக தன்னுடைய நாற்பதாவது முயற்சியில் வெற்றியும் கண்டு, Google நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்துள்ளார்.

man rejected by google for 39 times and hired in 40th attempt

இது தொடர்பாக, Linkedin-ல், தான் 39 முறை Google நிறுவனத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட மெயில் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக கூகுள் நிறுவனத்தில் அவர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது அவர் நிராகரிக்கப்படவே, அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் இரண்டு முறை மீண்டும் விண்ணப்பித்துள்ளார். அப்போதும் டெய்லர் நிராகரிக்கப்பட்ட, இப்படி மூன்று ஆண்டுகளாக 39 முறை முயன்றார்.

man rejected by google for 39 times and hired in 40th attempt

இறுதியில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜூன் மாத இறுதியில் டெய்லருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. மேலும் தன்னுடைய கேப்ஷனில்,."விடாமுயற்சிக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு கோடு உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

விடா முயற்சியால், டெய்லருக்கு வேலை கிடைத்துள்ளதை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "12 ஆயிரம் வருட மர்மம்!!.." திடீர் திடீர்ன்னு தோன்றி மறையும் பேய் கால் தடங்கள்??.. மிரள வைத்த ஆய்வு முடிவுகள்

Tags : #GOOGLE #MAN #MAN REJECTED BY GOOGLE #ATTEMPT #HIRED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man rejected by google for 39 times and hired in 40th attempt | World News.