Battery
The Legend

தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 27, 2022 11:23 AM

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் மேற்கு மாங்காடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரத். இவருக்கும் நமீதா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

kerala man dies before the birth of his son in accident

Also Read | 3 நாளா திறக்காத வீடு.. ஜன்னல் வழியா போலீஸ் பார்த்த காட்சி.. திடுக்கிட வைத்த சம்பவம்

மேலும், மொபைல் கடை ஒன்றையும் சரத் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. திருமணமான நாள் முதல் தங்களின் குழந்தைக்காக சரத் மற்றும் நமீதா ஆகியோர் காத்திருந்து வந்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நமீதா கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரசவ வலியால் துடித்த நமீதாவை திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

அப்போது நமீதாவுடன் சரத்தின் தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் தாயார் ஷீலா ஆகியோர் மருத்துவமனையில் இருந்துள்ளனர். மேலும், தான் நேரடியாக காலையில் மருத்துவமனை வந்து விடுவதாகவும் சரத் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நமீதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றைய தினம் இரவு, யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அரங்கேறியது.

நள்ளிரவு நேரத்தில், தனது கடையை அடைத்துக் கொண்டு, பைக்கில் தனது நண்பருடன் சரத் கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது, திடீரென பைக் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில், சாலையே அருகே உள்ள காம்பவுண்ட் ஒன்றிலும் மோதியுள்ளது. இதன் மூலம், படு காயமடைந்த சரத் மற்றும் அவரது நண்பரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சரத் உயிரிழந்தார். கடுமையான காயங்களுடன் அவரது நண்பருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரத்தின் மறைவு பற்றி, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிய வரவே, அனைவரும் இடிந்து போயினர். ஒரு பக்கம், மனைவி நமீதா குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவமனை சேர்க்கப்பட்ட நிலையில், மறுபக்கம் அவரது கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், அங்கிருவந்தவர்களை உடைந்து போகச் செய்தது.

சரத் இறந்த அதே நாளில், அவருக்கு மகனும் பிறந்துள்ளார். கணவர் எங்கே என தேடிய நமீதாவிடம் பின்னர் தான் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தனை நாட்கள் தங்களின் குழந்தையை காண ஆவலாக இருந்த கணவர் சரத்தை நினைத்து, கதறித் தடித்துள்ளார் நமீதா. தொடர்ந்து, சரத்தின் இறுதிச் சடங்கிற்கு குழந்தையுடன் நமீதா வரவே, அவரும் குடும்பத்தினரும் அங்கே கதறித் துடித்த சம்பவம், பலர் மனதையும் நொறுக்குவதாக இருந்தது.

தந்தை இறந்த அதே நாளில், சில மணி நேரங்களுக்கு பிறகு, மகனும் பிறந்துள்ள சம்பவம், பலரையும் வேதனையில் உறைய செய்துள்ளது.

Also Read | "குரங்கு அம்மை பற்றி மக்கள் பயப்படவேண்டாம்.. ஆனா இத மட்டும் கட்டாயம் செஞ்சிடுங்க".. வலியுறுத்திய இந்திய அரசு.. முழு விபரம்..!

Tags : #KERALA #ACCIDENT #MAN #SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala man dies before the birth of his son in accident | India News.