சிலந்திக்கு முடிவுகட்ட வாலிபர் எடுத்த முடிவு.. அடுத்த நாள் மொத்த நாடும் ஷாக் ஆகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் சிலந்தியை கொல்ல நினைத்து, அபாயகரமான செயலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இது மொத்த அமெரிக்காவையும் திகைப்படைய செய்திருக்கிறது.
Also Read | 24 கேரட் தங்கத்துல ஸ்வீட்.. விலையை கேட்டு மார்க்கெட்டே கலகலத்து போயிடுச்சு..
சிலந்தி தொல்லை
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள டிராப்பர் பகுதியை சேர்ந்தவர் கோரி மார்ட்டின் ஆலன். 26 வயதான இவர் சமீபத்தில் ஸ்ப்ரிங்க்வில்லி பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது சிலந்தி ஒன்றை பார்த்த அவர் அதனை கொல்ல நினைத்திருக்கிறார். அதன்படி, சிலந்தி மீது லைட்டர் மூலம் தீ வைக்க அவர் முயற்சித்திருக்கிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக அருகில் உள்ள இடங்களுக்கு தீ பரவியிருக்கிறது. இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஆலன் அங்கிருந்து சென்றிருக்கிறார். ஆனால், அவர் பற்றவைத்த நெருப்பு அந்த பகுதி முழுவதும் பரவியிருக்கிறது.
இதனால், ஸ்பிரிங்வில்லி-யின் சுமார் 60 ஏக்கர் மலைப்பகுதி தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதனிடையே உள்ளூர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தீயினை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
கைது
இதனிடையே ஆலனை காவல்துறையினர் செய்து செய்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய உட்டா கவுண்டி ஷெரிப் சார்ஜென்ட் ஸ்பென்சர் கேனான்," உட்டாவின் டிராப்பரைச் சேர்ந்த கோரி ஆலன் மார்ட்டின், என்பவரால் தற்செயலாக தீ வைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிலந்தியைக் கண்டுபிடித்தபோது அதை தனது லைட்டரால் எரிக்க முயன்றதாகக் கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்படி ஒரு சம்பவத்தை தான் எதிர்கொண்டதில்லை எனவும் கூறியுள்ளார் ஷெரிப். இந்நிலையில், ஆலனின் பையில் போதை பொருட்கள் இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் உட்டா கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே ஸ்பிரிங்வில்லி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து 90 சதவீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.