"உங்க போனை நான் எடுக்கல"..கதறிய இளைஞர்.. ஆத்திரத்தில் நண்பர்கள் செஞ்ச காரியம்.. சோகத்தில் முடிந்த பார்ட்டி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலத்தில் செல்போனை திருடியதாக சந்தேகப்பட்டு இளைஞரை அவரது நண்பர்களே தாக்கியது அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | இட்லி முதல் இத்தாலி வரை... செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்.. அடேங்கப்பா இவ்வளவு வகைகளா..?
பார்ட்டி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ராஜு மால். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று நண்பர்களுடன் வெளியே சென்றிருக்கிறார். கொல்கத்தாவில் சால்ட் ஏரிக்கு அருகே நடந்த பார்ட்டியில் ராஜு கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரது நண்பர்களும் உடன் இருந்திருக்கிறார்கள். பார்ட்டியின் நடுவே, அங்கிருந்த இளைஞர் ஒருவரின் மொபைல் போன் காணாமல்போயிருக்கிறது. இதனால் அனைவரும் தொலைந்த செல்போனை தேடியிருக்கிறார்கள். ஆனால், செல்போன் கிடைக்கவே இல்லை.
அதிர்ச்சி
இதனால், கோபமடைந்த செல்போன் உரிமையாளர் ராஜு மீது சந்தேகமடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய மொபைல் போனை கொடுத்துவிடும்படி கூறியுள்ளார் அந்த இளைஞர். அதற்கு, தான் அந்த மொபைலை எடுக்கவில்லை எனவும் தனக்கு ஏதும் தெரியாது எனவும் ராஜு கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றிருக்கிறது. ஒருகட்டத்தில் ராஜூவை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார் ராஜு.
இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடையவே, உடனடியாக அவரை உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் ராஜுவின் நண்பர்களுடன் உடன் சென்றுள்ளனர். ஆனால், ராஜு ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
புகார்
இதனையடுத்து ராஜுவின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி,"இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கிறோம். இருவர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே, ராஜு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும்" என்றனர்.
கொல்கத்தா மாநிலத்தில், செல்போனை திருடிவிட்டதாக இளைஞரை அவரது நண்பர்களே தாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Also Read | காதலியை தேடி வந்த இளைஞர்??.. கடைசியாக கடலை பார்த்து ஓடிய சிசிடிவி காட்சி.. கேரளாவை அதிர வைத்த சம்பவம்..

மற்ற செய்திகள்
