கரைக்கு வந்த சிக்னல்.. நடுக்கடலில் தலைகீழாக மிதந்த படகு.. "பக்கத்துல போய் பாத்ததுக்கு அப்புறம்.." 'த்ரில்' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயின் அருகே, பாய்மர படகில் நபர் ஒருவர் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென நடுக்கடலில் வைத்து நடந்த சம்பவமும், அதன் பின்னர் நடந்த நிகழ்வும் கடும் பரபரப்பை நெட்டிசன்கள் மத்தியில் கிளப்பி உள்ளது.
Also Read | பட்டமளிப்பு விழாவுக்காக மேடை ஏறிய வாலிபர்.. அரங்கில் கேட்ட திடீர் சத்தம்.. "என்ன ஒரு 'நெகிழ்ச்சி' மொமெண்ட்"
ஸ்பெயின் நாட்டின் சிசர்காஸ் தீவுகளில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில், பாய்மர படகு ஒன்றில் 62 வயதான நபர் ஒருவர் தனியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மோசமான வானிலை காரணமாக, திடீரென நபர் தனியாக சென்ற பாய்மர படகு கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக, அந்த நபரும் ரேடியோ மூலம் கரைக்கு அபாய சமிக்ஞை ஒன்றையும் கொடுத்துள்ளார்.உடனடியாக கடலோர காவல்படை, அந்த படகு கவிழ்ந்து கிடக்கும் இடத்தை சிக்னல் மூலம் அறிந்து கொண்டு, அவரை காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கியது. அதன்படி, மீட்புக் குழுவுடன் கப்பல் ஒன்று கரையில் இருந்து கிளம்பியது. மறுபுறம் மூன்று ஹெலிகாப்டர்களும் பறக்க, அந்த படகு கவிழ்ந்த இடத்தையும் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து, மீட்பு குழுவில் இருந்து ஒருவர், தலை கீழாக கிடந்த படகை நெருங்கி, உள்ளே நபர் இருப்பதை உறுதி செய்ய அதனை தட்டி பார்த்தார். அப்போது, அங்கிருந்து அந்த நபரின் சத்தம் வரவே, தலை கீழாக கிடந்த படகிற்கு அடியில், நீரில் உறையாமல் இருக்க கூடிய Suit ஒன்றை அணிந்து கொண்டு, முக்கால்வாசி உடல் நீரில் இருந்த படி அவர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கப்பல் மேலும் மூழ்காமல் இருக்க, மிதக்கும் பலூன்களையும் கப்பலில் பொருத்தி, மீட்புக் குழு மறுநாள் காலை வரை காத்திருந்தது. இதன் பின்னர், மீட்புக் குழுவில் இருந்து இரண்டு பேர், படகுக்கு அடியில் சென்று, அறையை திறந்து, உள்ளே பாதிக்கு மேல் நீரில் மூழ்கிய படி இருந்த நபரை மீட்டுக் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவரை விமானத்தில் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்தனர்.
அவருக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்பதால், கொஞ்ச நேரத்தில் அனுப்பப்பட்டார். சுமார் 16 மணி நேரம், கடல் நீருக்கு அடியில் அந்த நபர் சிக்கிக் கொண்டு உயிர் பிழைத்தது, சாத்தியமற்ற ஒன்று என்றே பலரும் வியப்புடன் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | போரை வென்ற காதல்.. உக்ரைன் காதலியை கரம்பிடித்த ரஷ்ய வாலிபர்.. கல்யாணம் நடந்த இடம் தான் 'செம'..